சென்னை புத்தகக் கண்காட்சி-2013ன் போது இந்நாவல் வாங்கக் கிடைக்கும்
வெளியீடு -
சந்தியா பதிப்பகம்
57 A, 53 வது தெரு,
அஷோக் நகர்
சென்னை - 83
தொ.பே- 2489 6979 / 93810 45211
நூலின் பின்னட்டை
அதிவேகமாக முன்னகரும் இன்றைய உலகில் இரு தனிமனிதர்களிடையே மனம் விட்டுப் பேசும் தருணங்களும் அருகி விட்டன. மனிதனுக்குள் அலைச்சலும் அமைதியின்மையும் கூடியபடியே இருக்கின்றன. உலகமயமும் நகரமயமும் அதிகரித்து வரும் இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதமனமும் அகல விரிந்து தனித் திணையாகிறது. திரிந்தலையும் திணைகளாகிற மனித மனங்களை இருபதாண்டு சிங்கப்பூர் மாற்றங்களூடாக, குறிப்பாக செம்பவாங் வட்டாரத்தில் நிகழும் மாற்றங்களூடாகச் சொல்லிச் செல்கிறது இந்நாவல். பல்லினம், சமய நம்பிக்கைகள் கொள்ளும் பல்வேறு பரிணாமம், அடையாள அட்டை, அந்தஸ்து, வேர்களை நோக்கிய தேடல், புது நகரில் சந்திக்கும் அடையாளச் சிக்கல்கள், போன்றவற்றைச் சொல்லிச் செல்லும் இந்நாவல் இரண்டு பெண்களைப் பற்றியது.
1 comment:
இனிய பாராட்டுகளும் மேன்மேலும் வளர அன்பான வாழ்த்து(க்)களும்.
Post a Comment